Saturday, May 30, 2015

நோய் தீர்க்கும் மூலிகைகள் மற்றும் மருத்துவ குறிப்புகள்

நோய் தீர்க்கும் மருத்துவ குறிப்புகள் மற்றும் மூலிகைகள்


தற்காலத்தில் மனிதன் கருவில் உருவானதிலிருந்தே அவனுக்கு மருத்துவர் மருந்துகளை கொடுத்து விடுகிறார். பிறந்து வளர வளர நாள்தோறும் ஏதேனும் ஒரு நோய் காரணமாக மருந்துகளை தேட ஆரம்பிக்கிறான்.

ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படை மருந்துண்ணாமல் இருப்பதுதான். ஆனால் தற்காலத்தில் அது சாத்தியமில்லை.

உண்ணும் உணவுப் பொருள், குடிக்கும் நீர் உட்பட அனைத்திலுமே இன்று இராசாயணம் கலந்துவிட்டது. விளைவு?

நோய்........... நோய்.... நோய்.......

எந்த ஒரு குடும்பமாக இருந்தாலும் சரி, மேல்தட்டு, கீழ்தட்டு என பாகுபாடு இல்லை நோய்க்கு. அசந்தால் அடித்து போட்டுவிடும். ஆரோக்கியம் குன்றச் செய்யும் நோய் கிருமிகளுக்கு இந்த பாகுபாடெல்லாம் தெரிவதில்லை. வசதி இருந்தால் உயர்தரமான மருத்துவம்.. இல்லையென்றால் தங்களுக்குத் தெரிந்த மருத்துவ முறைகளை கையாண்டு நோயை குணப்படுத்த முயற்சிக்கின்றனர்.

இயற்கையிலேயே கிடைக்கும் மருந்துவ குணம் மிக்க தாவரங்கள் போன்றவற்றை பயன்படுத்தி நோய் தீர்க்கிறார்கள். இதற்கு இயற்கை வைத்தியம் என்ற பெயர் வைத்திருந்தாலும், மற்றொரு பெயராக மூலிகை வைத்தியம் என்கின்றனர்.

நம் நாட்டில் என்னென்ன மூலிகைகள் உள்ளன? அவைகள் என்னென்ன நோய்களை தீர்க்கும் மருந்தாக செயல்படுகின்றன? என்பதை தெரிந்துகொள்வோம்.

கண்ணில் பார்க்கும் ஒவ்வொரு தாவரமும் அதனுள் ஓர் மருத்துவ சக்தியை ஒளித்து வைத்துள்ளது. சாதாரணமாக நாம் களையாக நினைக்கும் புல் பூண்டு கூட அதனுள் அபிரிதமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியுள்ளது.
                              ^
மேலே செல்ல||

நோய் தீர்க்கும் மூலிகை மருந்துகள்:


அதிமதுரம்
Glycyrhiza Glabra
தீரும் நோய்கள்: இருமல், வயிற்றுப்புண், பசியின்மை, சுவையின்மை, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்.

அமுக்கராக் கிழங்கு
Withania Somnifera
தீரும் நோய்கள்: உடல் எடை அதிகரிக்க, உடல் அசதி, மூட்டுவலி, தூக்கமின்மை.

அசோகு
Saraca Indica
தீரும் நோய்கள்: கருப்பை நோய்கள், சூதக வலி, மாதவிடாய் போக்கு, வெள்ளைப்படுதல்.

அம்மான் பச்சரிசி
Euphorbia Hirta
தீரும் நோய்கள்: முகப்பரு, முகத்தில் எண்ணெய்ப் பசை, கால் ஆணி, பித்த வெடிப்பு, இரைப்பு, தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க.

அருகம்புல்
Cynodon Dactylon
தீரும் நோய்கள்: இரத்தம் சுத்தமாக, வியர்வை நாற்றம், உடல் அரிப்பு, நமைச்சல், வெள்ளைப்படுதல்.

அரிவாள்மனை பூண்டு
Sida Acuta
தீரும் நோய்கள்: காயங்கள், புண்களுக்கு களிம்பு செய்து பூச.

அவுரி
Indigofera Tinctoria
தீரும் நோய்கள்: பாம்புக்கடிக்கு முதலுதவி, காமாலை, தோல் நோய்கள், ஒவ்வாமை (அலர்ஜி).

ஆடாதோடை
Adhatoda Zeylanica
தீரும் நோய்கள்: சளி, இருமல், தொண்டைக் கட்டு.

ஆடுதீண்டாபாளை
Aristolochia Bracteolata
தீரும் நோய்கள்: தோல் நோய்கள், சிரங்கு, கரப்பான், வண்டுக்கடி ஆகியவைகளுக்கு மேல் பூச்சு.

ஆரை
Marselia Quadrifida
தீரும் நோய்கள்: சிறுநீர்க்கட்டு, சிறுநீர் எரிச்சல்.

ஆவாரை
Cassia Auriculata
தீரும் நோய்கள்: நீரிழிவு, மேக நோய்கள், நீர்கடுப்பு, உள்ளங் கால் எரிச்சல், சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல்.

இஞ்சி
Zingiber Officinale
தீரும் நோய்கள்: பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக் கம்மல்.

இம்பூரல்
Oldenlandia Umbellata
இரத்த வாந்தி, மாதவிடாய் போக்கு கட்டுபடுத்த.

உத்தாமணி (வேலிப்பருத்தி)
Pergularia Daemia
தீரும் நோய்கள்: குழந்தைகளுக்கு செரியாமை (அஜீரணம்), மாந்தம், வயிற்றுப் பொருமல் ஆகியவைகளுக்கு.

உத்திராட்சம்
Elaeocarpus Scarius
தீரும் நோய்கள்: குழந்தைகளுக்கு தொண்டைக்கட்டு, இடைவிடாத விக்கல், கோழை.

ஊமத்தை
Datura Metel
தீரும் நோய்கள்: புண்களுக்கு வெளிப்பூச்சு மட்டும்.

எருக்கன்
Calotropis Gigantea
தீரும் நோய்கள்: தேள், குளவி, பூச்சிகளின் விஷக்கடி, கட்டிகளுக்கு மேல் பூச்சு.

எள்
Sesamum Indicum
தீரும் நோய்கள்: உடற்சூடு, தலைப் பாரம் குறைய.

ஏலக்காய்
Elettaria Cardamomum
தீரும் நோய்கள்: அஜீரணம், குமட்டல், வாந்தி.

ஓதியன்
Lannea Coromandelica
வாய்புண், குடல்புண், இரத்தக்கழிச்சல், பேதி.

ஓமம்
Carum Roxburghianum
தீரும் நோய்கள்: மூக்கடைப்பு (Running nose), பீனிசம்.

ஓரிதழ் தாமரை
Hybanthus Enneaspermus
தீரும் நோய்கள்:சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வெள்ளைப்படுதல்.

மேற்கண்டவை ஒரு உதாரணத்திற்கு கூறப்பட்டுள்ளவைதான். ஆயிரக்கணக்கான மருத்துவ தாவரங்கள் உலகில் காணப்படுகின்றன. அவைகள் அனைத்துமே மனிதனுக்கு நோய் தீர்க்கும் மருத்துவ மூலிகைகள்தான்.

மேலே செல்ல||

நோய் தீர்க்கும் மூலிகை மருத்துவம்: 

சாதாரண சளி, காய்ச்சல் தொடங்கி, உயிரை பறிக்க கூறிய எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்கள் முதலான கொடிய நோய்களுக்கும் கூட மூலிகை மருத்துவம் உள்ளது. சரியான முறையில் கடைபிடித்தால் எந்த ஒரு கொடிய நோய்களையும் இயற்கையாக கிடைக்கும் இந்த மூலிகைகளை கொண்டே சரி செய்துவிடலாம் என அடித்து சொல்கின்றனர் மூலிகை மருத்துவர்கள்.

மூலிகைகள் மனிதர்களுக்கு மட்டுமல்ல... விலங்குகளுக்கும் கூட நோயை தீர்க்கின்றன. இயற்கையிலேயே சில விலங்குகள் அவற்றின் மூலிகை தன்மைகளை அறிந்து வைத்துள்ளன. கீரி-பாம்பு சண்டையில் கீரிக்கு ஏறிய விஷயத்தை முறிக்க அது தேடி செல்லும் மூலிகை செடிகள், குரங்குக்கு காய்ச்சல் வந்தால் அது தேடி எடுத்து வாயில் அதக்கி கொள்ளும் மூலிகை என நிறைய உள்ளன.

மருத்துவ முறைகளில் மூலிகை மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம், ஆங்கில மருத்தும், சீனர்களின் அங்கு பங்சர் மருத்துவம் என குறிப்பிட்ட வைத்திய முறைகள் உள்ளன. அவற்றில் சிறந்த இயற்கையான வைத்திய முறை மூலிகை மருத்துவம் என சொல்லப்படும் சித்த மருத்துவம் தான்.

மேலே செல்ல||

இயற்கை உணவுகளை - பச்சைக் காய்கறிகளை மட்டுமே  உண்டு தீராத நோய்களை யும் தீர்த்துக் கொள்ள  முடியும்.

இயற்கை உணவுகள் - பச்சைக் காய்கறிகள், பழங்கள் மட்டுமே  உண்டு,முடி உதிர்தல், தீராத தலைவலி, குடிப்பழக்கம், நாட்பட்ட மலச்சிக்கல், மூல வியாதி, அல்சலர், அலர்ஜி, சைனஸ், ஈகனோபீலியா, அப்பெண்டிக்ஸ், போன்ற சிறிய நோய்களினின்றும்  தொழுநோய், இரத்த அழுத்தம், ஆஸ்துமா, நீரிழிவு, ஆர்த்தரெடிக்,ரொமாட்டிஸம், வலிப்பு நோய், காச நோய், புற்றுநோய், எய்ட்ஸ் நோய், இதயநோய், சிறுநீரகநோய், ஆண்மைக் குறைவு, நரம்புத்தளர்ச்சி, மன நோய், வெண்குஷ்டம் ஆகிய  பெரிய நோய்களினின்றும் விடுதலை பெறலாம். அது பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நோய் தீர்க்கும் மூலிகைகள்:


1. ஓரிதழ் தாமரை

நம் அருகே பரவிக் கிடந்த மூலிகைகளை களை என நினைத்து அகற்றிவிடுகிறோம். அது பற்றி தெரிந்து கொண்ட பிறகு தேடினால் நமக்கு கிடைப்பதில்லை.

ஓரிதழ் தாமரையும் அப்படிதான். ஓரிதழ் தாமரை என்றால் அது தண்ணீரில் மலரும் தாமரை என்று நினைத்துவிட வேண்டாம்.

தரையில் வாழும் ஒரு மூலிகைச் செடி அது. அதன் இலைகளை வாயில் போட்டு மென்றால் குழகுழப்பு தரும்.

orithal thamarai chedi

இதன் இலை, தண்டு, பூ, வேர், காய் அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டது. இதற்கு இரத்தின புருஷ் என்ற பெயரும் உண்டு.

தீர்க்கும் நோய்கள்:

மேகவெட்டை, சுரக்காய்ச்சல், இரைப்பு நோய், புண்கள்.

மேலும் ஓரீ்தழ் தாமரை பற்றி தெரிந்துகொள்ள

2. நஞ்சறுப்பான்


எதிர் அடுக்குகளில் முட்டை வடிவ இலைகளைக் கொண்ட சிறிய பூங்கொத்துக்களை உடைய வேலிகளில் படரும் சுற்றுக்கொடி இனம் நஞ்சறுப்பான். பஞ்சுடன் கூடிய முட்டை வடிவ விதைகளைக் கொண்டு இருக்கும். வேர், இலை மருத்துவக் குணம் உடையது. வாந்தியை ஏற்படுத்தும், வியர்வையை அதிகமாக்கும், கோழையை அகற்றும் குணம்கொண்டது. தமிழகமெங்கும் எல்லா மண்வளத்திலும் வேலிகளில் தானாகவே வளரக்கூடியது.


nanjuarupan mooligai chedi

வேறுபெயர்கள் : கொடிப்பாலை, கறிப்பாலை, நஞ்சுமுறிச்சான் கொடி, கொண்ணி.

ஆங்கிலப்பெயர்: Tylophorqosthmatice; W&A; Asciepiadaceae

மருத்துவ குணங்கள் : நஞ்சறுப்பான் இலையை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி அரை கிராம் எடுத்து வெந்நீரில் 3 வேளைக்கு சாப்பிட வியர்வை பெருகும். சளியைப் போக்கும். சீதக்கழிச்சல், நீர்த்தக்கழிச்சல் குணமாகும்.

நஞ்சறுப்பான் இலைச்சூரணம் 150 மில்லியளவு எடுத்து தேனில் கலந்து இரண்டு வேளை கொடுத்துவர குழந்தைகளுக்குக் காணும் கக்குவான் இருமல் குணமாகும்.

நஞ்சறுப்பான் இலை, நொச்சி, தைல இலை வகைக்கு கைப்பிடியளவு எடுத்து 2 லிட்டர் நீரில் போட்டுக் கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் தலைக்கனம், தலைவலி, உடல்கனம், இருமல், சளி, இளைப்பு குணமாகும்.

நஞ்சறுப்பான் இலையை அரைத்து எலுமிச்சம்பழம் அளவு சாப்பிடக்கொடுத்து, கடிவாயிலும் வைத்துக்கட்ட வாந்தியாகி எந்தவிதமான நஞ்சும் முறியும் (மயக்க நிலையில் இருந்தால் நஞ்சறுப்பான் வேர்ப்பொடியை கொடுக்கலாம்.)

நஞ்சறுப்பான் சமூலத்தை நிழலில் காயவைத்து இடித்துப் பொடியாக்கி அதே அளவு மிளகுப்பொடி கலந்து 5 கிராமாக 2 வேளை ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்துவர பாதரசம், ரசக்கற்பூரம், சவ்வீரம் போன்ற பாசாணங்களின் வீறு தணியும். உப்பில்லாத மோர் உணவு சாப்பிட வேண்டும். இதே பொடியை அரை கிராம் அளவிற்கு 3 வேளையாகத் தொடர்ந்து சாப்பிட்டுவர மேக வாய்வுப் பிடிப்புகள் குணமாகும்.

நஞ்சறுப்பான் பூண்டை கைப்பிடியளவு எடுத்து சிதைத்து அரைலிட்டர் நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி வடிகட்டி தலைமுழுகிவர மண்டைக்குத்தல் குணமாகும்.

நஞ்சறுப்பான் இலைகளை நீரிலிட்டு காய்ச்சி,வடிகட்டி ஒரு அவுன்ஸ் வீதம் ஒரு நாள்,இருவேளை குடித்து வந்தால் சளி,ஆஸ்துமா குறையும்.Tags: maruthuva kurippugal, மருத்துவ குறிப்புகள், மருத்துவம், மூலிகை, மூலிகை மருத்துவ குறிப்புகள், மூலிகை மருத்துவம், நோய் தீர்க்கும் மூலிகைகள்.

4 comments:

 1. மூலிகைகள் நோய்களை தீர்ப்பதுமட்டுமல்ல
  நோய்கள் வராமல் தடுக்கவும் செய்கின்றன நல்ல பயனுள்ள பதிவு

  ReplyDelete
  Replies
  1. பின்னூட்டம் அளித்து ஊக்கபடுத்திய திரு பட்டாபி ராமன் அவர்களுக்கு நன்றி.

   Delete
 2. மிகவும் பயனுள்ள குறிப்புகள்... நன்றி...

  இன்று முதல் உங்கள் தளத்தை தொடர்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கு மகிழ்ச்சி. நன்றி.

   Delete